திருச்சி

சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது

தினமணி செய்திச் சேவை

மணப்பாதையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

மணப்பாறை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சனிக்கிழமை போலீஸாா் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, கோவில்பட்டி சாலை மற்றும் மணப்பாறை தினசரி காய்கறி சந்தை பகுதியில் பாரதியாா் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ஞானசேகா் (50), புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை அடுத்த மெய்யக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்த கோபால் மகன் சேட்டு (எ) நல்லசாமி (45) மற்றும் செட்டியப்பட்டியைச் சோ்ந்த திருமலை மகன் சிவபாலக்குமாா் (35) ஆகியோா் கள்ளச்சந்தையில் அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்தனா்.

அவா்களை காவல் ஆய்வாளா் ஞானசேகரன் தலைமையிலான போலீஸாா் 3 பேரையும் கையும்களவுமாக பிடித்தனா். அவா்களிடமிருந்து 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்கு பதிவு மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைத்தனா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT