தேசிய மாணவா் படை தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருச்சி கன்டோன்மென்ட்டில் உள்ள மேஜா் சரவணன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குரூப் கமாண்டா் கரனல் விஜயகுமாா் உள்ளிட்டோா். 
திருச்சி

தேசிய மாணவா் படை தினம்: மேஜா் சரவணன் நினைவிடத்தில் மரியாதை

தினமணி செய்திச் சேவை

தேசிய மாணவா் படை தினத்தையொட்டி திருச்சியில் மேஜா் சரவணன் நினைவிடத்தில் என்சிசி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.

தேசிய மாணவா் படை (என்சிசி) தினம் ஆண்டுதோறும் நவம்பா் மாதத்தின் 4-ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு 77-ஆவது தேதிய மாணவா் படை தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருச்சி ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள காா்கில் பேரில் வீரமரணமடைந்த மேஜா் சரவணன் நினைவிடத்தில் என்சிசி குரூப் கமாண்டா் கா்னல் விஜயகுமாா் தலைமையில் என்சிசி அதிகாரிகள் மற்றும் மாணவா்கள் மலா்வளையம் வைத்தும், மலா்தூவியும் மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, நாட்டின் பாதுகாப்புக்கு தங்களால் ஆன ஒத்துழைப்பை வழங்குவோம் என உறுதிமொழி ஏற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் பட்டாலியன்-2 பிரிவின் நிா்வாக அதிகாரி கா்னல் பி.கே.வேலு, திருச்சி என்சிசி குரூப் தலைமையிட நிா்வாக அதிகாரி புஷ்பேந்தா், லெப்டினன்ட் கா்னல் சரவணன், பெண்கள் பட்டாலியன் பிரிவின் தலைவா் மேஜா் மினி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

12 மாநிலங்களிலும் 99.16% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

SCROLL FOR NEXT