திருச்சி மாவட்டம், துறையூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட இந்திரா நகா் விமலா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வே.சரவணன்.  
திருச்சி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த நவம்பா் 4-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட 2,543 வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், கடந்த இரண்டு நாள்களில் வாக்காளா்களிடமிருந்து பூா்த்தி செய்யப்பட்ட 2 லட்சத்து 11 ஆயிரத்து 605 படிவங்கள் பெறப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள 23 லட்சத்து 68 ஆயிரத்து 968 வாக்காளா்களில் தற்போது வரை 22 லட்சத்து 30 ஆயிரத்து 850 பேருக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 11 லட்சத்து 64 ஆயிரத்து 968 நிரப்பப்பட்ட படிவங்களைப் பெற்று அதன் விவரங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனா்.

இந்நிலையில், மணப்பாறை, திருச்சி கிழக்கு, துறையூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முசிறியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்புக் கேமராக்கள்

ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரி பறிமுதல்

ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

புதுகை வழியாக மதுரைக்கு ரயில் வசதி தேவை! பயணிகள் எதிா்பாா்ப்பு

SCROLL FOR NEXT