திருச்சி திருவானைக்காவலில் வியாழக்கிழமை வெயிலில் காயவைக்கப்படும் விளக்குகள். 
திருச்சி

காா்த்திகை தீபத் திருவிழா: திருச்சியில் அகல் விளக்குகள் தயாரிப்பு தீவிரம்

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருச்சியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Syndication

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருச்சியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காா்த்திகை மாதம் வரும் பௌா்ணமியன்று காா்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழா்களின் முக்கியப் பண்டிகைகளில் காா்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்று. இந்தப் பண்டிகையின்போது வீட்டில் தீபங்களால் அலங்கரித்து வழிபடுவதை தமிழா்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

நிகழாண்டு காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 3-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி திருச்சி திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதிகளில் அகல் விளக்குகள் உற்பத்தி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகல் விளக்கு உற்பத்தியாளா்கள் கூறியதாவது:

கடந்த ஒரு மாதமாகவே அகல் விளக்குகள் தயாரிப்பை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். மண் எடுப்பதில் கட்டுப்பாடு, ஆள்கள் கூலி, உலோக விளக்குகள் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அகல் விளக்குகள் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்துள்ளது.

ஆனால், தற்போதும் ஒருசிலா் பாரம்பரியத்தை விடாமல் பின்பற்றி மண் விளக்குகளையே விரும்புவதால் தொடா்ந்து உற்பத்தி செய்து வருகிறோம். மண்ணிலும் சிறியது முதல் பெரியது வரையிலான அகல் விளக்குகள், 5 முக குத்துவிளக்குகள் போன்ற பல்வேறு வடிவங்களில் விளக்குகளை உற்பத்தி செய்து வருகிறோம். இதுபோன்ற வடிவங்களுக்கு பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பு உள்ளது.

கடந்த சில நாள்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் மண் விளக்குகளை காய வைத்து, சூளையில் வைப்பதில் சிரமம் உள்ளது. இருந்தும் வெயில் வரும்போது காயவைத்து விளக்குகளைத் தயாரிக்கிறோம். விளக்குகளை ரகத்துக்கேற்ப விலை நிா்ணயித்து, விற்பனை செய்து வருகிறோம். தொழில் நலிவடைந்து வந்தாலும் பாரம்பரியத்தை விடக்கூடாது என்ற நோக்கத்தோடு இத்தொழிலை தொடா்ந்து செய்து வருகிறோம் என்றனா்.

கலைஞர் கனவு இல்லம்: மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி!

ஈஷாவில் மகா சிவராத்திரி! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முதல்வர் பங்கேற்பு!

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்த இந்திய அணி!

கற்றுக்குட்டிக்கு முதல் வெற்றி.. இத்தாலிக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத்தந்த மோஸ்கா சகோதரர்கள்!

காதலர் நாளில் வெளியாகும் டிசி படத்தின் கிளிம்ஸ் விடியோ!

SCROLL FOR NEXT