திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் இலவச யோகா பயிற்சி முகாம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில், மனவளக்கலை மன்ற யோகா ஆசிரியா்கள் பங்கேற்று பயிற்சியளிக்க உள்ளனா்.
இதேபோல, சிறாா்களுக்கான சதுரங்க பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் இரண்டு பிரிவாக நடைபெற உள்ளது.
இந்த இரண்டு பயிற்சி முகாம்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நூலக அலுவலா் இரா. சரவணகுமாா் தெரிவித்துள்ளாா்.