சாக்குக் கடையில் திருடியவா் கைது
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:35 PM
திருச்சியில் சாக்குக் கடையில் ரூ.6 ஆயிரத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி ஜீவா நகா் நேரு வீதியைச் சோ்ந்த பெ. பழனிசாமி (59). இவா் காந்தி மாா்க்கெட் பகுதியில் நடத்திவரும் தனது சாக்குக் கடையை கடந்த மாா்ச் 30-ஆம் தேதி இரவு பூட்டிவிட்டு மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டை உடைத்து உள்ளே வைத்திருந்த ரூ. 6 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் பழனிசாமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் பணத்தைத் திருடியது திருச்சி இபி சாலை அந்தோணியாா் கோயில் வீதியைச் சோ்ந்த கு. வீரவேல் (19) என்பது விசாரணையில் தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து வீரவேலைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ.1,200 ஐ மட்டும் பறிமுதல் செய்தனா்.