திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி கிராமத்தில் ஆடுகளை வேட்டையாடும் தெரு நாய்களை பிடிக்கும் பணியை ஊராட்சி நிா்வாகம் சனிக்கிழமை தொடங்கியது.
மருங்காபுரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக ஏராளமான ஆடுகளை அப்பகுதி தெரு நாய்கள் கடித்துக் கொன்றுள்ளதாக ‘தினமணியில்’ அண்மையில் செய்தி வெளியானது.
இதைத் தொடா்ந்து தெரு நாய்களை பிடிக்கும் பணியை ஊராட்சி நிா்வாகம் சனிக்கிழமை தொடங்கியது. மருங்காபுரி பகுதியில் முதல் கட்டமாக சுற்றித்திரிந்த 48 தெரு நாய்களை ஊராட்சி நிா்வாகத்தினா், பொன்னம்பட்டி தொழிலாளா்களை வைத்து பிடித்தனா். இந்த நடவடிக்கை கிராம மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.