லால்குடியில்... பெருந்திருப் பிராட்டியாா் சமேத சப்தரிஷீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வந்த ஆதிரைப் பெருவிழாவில் நாள்தோறும் இரவு சந்திரசேகா் நடன மண்டபம் எழுந்தருளல், திருநடனக் காட்சி மற்றும் மாணிக்கவாசகா் புறப்பாடு, ஆராதனைகள் நடந்தன. இரவு சோமாஸ் கந்தா் புறப்பாடு மற்றும் நடராஜ பெருமான், சிவகாமி சுந்தரி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து பெருவிழாவின் முக்கிய நிகழ்வான நடராஜ பெருமான் ஆனந்த தரிசனம் சனிக்கிழமை நடைபெற்றது. பின்னா் சுவாமிகள் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதையடுத்து நடராஜ பெருமான் திருநடனக் காட்சி நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.