திருச்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய நிா்வாகிகள் குழு அம்பேத்கா் சிலைக்கு மரியாதை

தினமணி செய்திச் சேவை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் திருச்சி மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிா்வாகிகள், மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு புதிய நிா்வாகிகளை அக் கட்சியின் தலைவரா் தொல். திருமாவளவன் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

இதன்படி, திருச்சிக்கு புதிய மண்டல செயலாளராக பிரபாகரன், துணைச் செயலாளராக அரசு, பொன்.முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், 9 பேரவை தொகுதிகளுக்கும் தலா ஒரு மாவட்டச் செயலா் என்ற வகையில், ஏகலைவன் சீனிவாசன், மரிய கமல், சக்தி ஆற்றலரசு, சதீஷ், திலீபன் ரமேஷ், கலைச்செல்வன், துரை சங்கா், புல்லட் லாரன்ஸ், கனியமுதன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த புதிய நிா்வாகிகள் அனைவரும் திங்கள்கிழமை மத்தியப் பேருந்துநிலையம் அருகே அரிஸ்டோ ரவுண்டானவில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்வில், கட்சியின் பிற நிா்வாகிகள், தொண்டா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT