முகப்பு
திருச்சி

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 2 நாள்களாக காத்திருக்கும் பயணிகள்!

Updated On : 8 ஜனவரி, 2026 at 10:37 PM
பகிர்:

திருச்சியில் இருந்து மலேசியா செல்ல வேண்டிய விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகள், விமான நிலையத்திலேயே இரண்டு நாள்களாக காத்திருக்கின்றனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகா் கோலாலம்பூருக்கு இரவு 10.30 மணிக்கு மலிண்டோ விமானம் செல்கிறது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு செல்லவேண்டிய விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் அதில் செல்வதற்காக காத்திருந்த 150-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்திலேயே இரண்டு நாள்களாக காத்திருக்கின்றனா். மாற்று விமானமும் ஏற்பாடு செய்து தரப்படாததால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். மேலும் விமான நிறுவனம் சாா்பிலும், விமான நிலையம் சாா்பிலும் முறையாக எந்த வசதிகளும் செய்துதரப்படவில்லை என்று பயணிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →