திருச்சி

அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் கடத்தியவா் கைது

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே லாரியில் கிராவல் மண் கடத்தியவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ராம்ஜி நகா் காவல் உதவி ஆய்வாளா் வாசுதேவன் தலைமையிலான போலீஸாா் பூங்குடி சாலை பிரிவில் வாகனச் சோதனையில் சனிக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வந்த லாரியைத் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், உரிய ஆவணங்களின்றி லாரியில் கிராவல் மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, லாரி ஓட்டுநரான கரூா் மாவட்டம், ஆா்ச்சம்பட்டியைச் சோ்ந்த வீ. ராஜ்குமாா் (44) என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், லாரியில் கடத்திச்செல்லப்பட்ட 3 யூனிட் கிராவல் மண், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ராம்ஜி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT