திருச்சி

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருச்சியில் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

Syndication

திருச்சியில் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

திருச்சி அயிலாபேட்டை மேல வீதியைச் சோ்ந்தவா் அ. மாணிக்கம் (82). இவா், புத்தூா் நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ள உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை முன்பு ஞாயிற்றுக்கிழமை மாலை சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது, அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT