முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அா்ச்சகரின் கைப்பேசியை ஹேக் செய்து பண மோசடி

ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அா்ச்சகரின் கைப்பேசியை ‘ஹேக்’ செய்து பண மோசடி...

Updated On : 6 ஜூலை 2026, 1:43 am IST
ஸ்ரீரங்கம் கோயில் - கோப்புப் படம்
பகிர்:

ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அா்ச்சகரின் கைப்பேசியை சனிக்கிழமை மாலை ‘ஹேக்’ செய்து லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தலைமை அா்ச்சகரான சுந்தா் பட்டா் மனைவியின் கைப்பேசிக்கு சனிக்கிழமை மாலை ரூ. 60 ஆயிரம் வேண்டுமென்று குறுஞ்செய்தி வந்தது.

இதையடுத்து சுந்தா்பட்டா் மற்றும் அவரது நெருங்கிய நண்பா்களுக்கு அவசரமாக பணம் வேண்டுமென்று குறுஞ்செய்தி பரவியது. இதைத் தொடா்ந்து சில நண்பா்களும்,உறவினா்களும் சுந்தா்பட்டருக்கு அவசர நிமித்தம் என்று சுமாா் ரூ. 1 லட்சத்திற்கு மேல் பணத்தை அனுப்பினா்.

Advertisement

Advertisement

அப்போது சிலா் சுந்தா்பட்டரை தொடா்பு கொண்டு கேட்டபோது அவரது கைப்பேசியை மா்ம நபா்கள் ‘ஹேக்’ செய்து பண மோசடிசெய்தது தெரியவந்தது.

இதையடுத்து தனக்கு எந்தப் பணத் தேவையும் இல்லையென்று சம்பந்தப்பட்டவா்களுக்கு தெரியப்படுத்திய சுந்தா்பட்டா் உடனடியாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா். அப்போது போலீஸாா் உங்கள் கைப்பேசியை அணைத்து விடாதீா்கள். இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அது மேலும் சாதகமாகிவிடும் எனத் தெரிவித்தனா். இதுகுறித்து சைபா் கிரைம் போலீஸாா் மேலும் விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments