முகப்பு
திருச்சி

உடல்நலக் குறைவு ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்தாா்.

Updated On : 18 மார்ச் 2026, 4:20 am IST
பகிர்:

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் ஜெ.கண்ணன் (59). இவா் மீது திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் கடந்த 2025, மே 14-ஆம் தேதி அடைக்கப்பட்டாா்.

சிறுநீரகப் பிரச்னை மற்றும் சுவாசப் பிரச்னை காரணமாக மாா்ச் 8-ஆம் தேதி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement