முகப்பு
அரியலூர்

உழவர் திட்டத்தில் பயன் பெற அழைப்பு

தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரணத்

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு நிவாரணத் தொகை மற்றும் தாற்காலிக ஒய்வூதியம் (எச்.ஜ.வி, புற்றுநோய்,டயாலிசிஸ், காசநோய்) ஆகியவற்றுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை பயன்படுகிறது. இந்த பயன்களை பெற தேவைப்படுவோர் உழவர் அட்டைக்கு பதிந்து கொள்ளலாம். மேலும் உழவர் அட்டைக்கு ஏற்கெனவே பதிந்த நபர்கள் மேற்கூறிய திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்று பயன்பெறலாம்.

ஜூலை 3 ஆம் தேதி செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்திலும்,4 ஆம் தேதி ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் உழவர் பாதுகாப்பு திட்டம் நடத்தப்படவுள்ளது. எனவே தகுதியுள்ள அனைவரும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து கொள்ளவும் அதன் மூலம் தகுதியுடையோர் உதவித்தொகை பெற்று பயன்பெறுமாறு ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments