நீரோடையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வலியுறுத்தல்
செந்துறை அருகே தனியார் சிமென்ட் ஆலை ஆக்கிரமித்துள்ள நீரோடையை மீட்டு தரவேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் அண்மையில் கோரிக்கை மனு அளித்தனர்.
செந்துறை அருகே தனியார் சிமென்ட் ஆலை ஆக்கிரமித்துள்ள நீரோடையை மீட்டு தரவேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் அண்மையில் கோரிக்கை மனு அளித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் செந்துறை ஒன்றியச் செயலர் இரா.ராயர், நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: கீழப்பழுவூர் அருகே உள்ள தனியார் சிமென்ட் ஆலையின் சுண்ணாம்புக் கல் சுரங்கத்துக்கு உள்ளே செல்லும் வழியில், மிகப்பெரிய நீரோடை உள்ளது. மழைக் காலங்களில் மழை நீர் இதன் வழியாகச் சென்று அங்குள்ள பெரிய ஏரியை நிரப்பும்.
இந்த ஏரியை நம்பி அப்பகுதி விவசாயிகள், பயிர் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில், இந்த நீரோடையை தனியார் சிமென்ட் ஆலை-சுண்ணாம்புக் கல் சுரங்கத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனை மீட்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.