மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி வலை, பரிசல்கள்: நவ.20-க்குள் விண்ணப்பிக்கலாம்
ஐம்பது சதவீத மானியத்தில் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையினாலான பரிசல்கள் பெற விருப்பமுடைய மீனவர்கள், வரும் 20-ஆம்
ஐம்பது சதவீத மானியத்தில் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையினாலான பரிசல்கள் பெற விருப்பமுடைய மீனவர்கள், வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2017-18 ஆம் ஆண்டில் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையினாலான பரிசல்கள் 50 சதவீத மானியத்தில் பெற விருப்பமுள்ள உள்நாட்டு மீனவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட -பழங்குடியினருக்கு 16.62 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். பங்கு மீனவர்கள் / முழுநேர உள்நாட்டு மீனவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தில் ஏற்கெனவே பயன்பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்.
விருப்பமுள்ள உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் வரும் 20-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, அரியலூர் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், அறை எண்:234, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர் என்ற முகவரியிலும், 04329-228699 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.