அரியலூர்

தலைமைக் காவலர் மனைவி  கொலை வழக்கு: தப்பியவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

DIN

அரியலூர் அருகே தலைமைக் காவலர் மனைவி கொலை வழக்கில் பிடிபட்டு தப்பியவர்  9 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
அரியலூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் பரமசிவம். அரியலூர் காவல் நிலைய தலைமைக் காவலரான இவர், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி மைதிலி கடந்த 2008 ஆம் ஆண்டு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, ஓட்டக்கோவில், கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் அண்ணாதுரையை (40) கைது செய்து, விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றபோது அவர் தப்பினார். 
இந்நிலையில் ரகசியத் தகவலின்பேரில் அரியலூர் போலீஸார் சென்னை சென்று அங்கு தலைமறைவாக இருந்த அண்ணாதுரையை செவ்வாய்க்கிழமை இரவு  கைது செய்தனர்.  அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் 2 குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்ட தலைமை காவலர் பரமசிவம் மீதான கொலை வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT