அரியலூர்

நல்லாம்பாளைய குளத்தில் பாசிகளை அகற்ற வலியுறுத்தல்

DIN

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நல்லாம்பாளையம் கிராமத்தில் உடையார்பாளையம் நெடுஞ்சாலையையொட்டி உள்ள குளத்தில் துர்நாற்றம் வீசும், அழுகிய நிலையில் உள்ள பாசிகளை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் கிராமத்தில் செந்துறை -உடையார்பாளையம் நெடுஞ்சாலையை ஓட்டியுள்ள குளத்தில் பாசிகள் முழுவதும் படர்ந்து அழுகி துர்நாற்றம் வீசுகிறது.  இதனால் அங்கு குளிக்கும்  பொதுமக்களுக்கு அரிப்பு ஏற்படுவதாகவும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 
மேலும் சாலையையொட்டி உள்ளதால் கார், வேன் போன்ற வாகனங்களை இங்கு கழுவி வருகின்றனர். இது போல பல பயன்பாடுகள் உள்ள குளத்தில் உள்ள அழுகிய பாசிகளை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

SCROLL FOR NEXT