அரியலூர்

மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

DIN

மீன்சுருட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் வட்டப் சட்டப் பணிகள் குழு இணைந்து பள்ளி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சுமதி தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு செயலர் சரவணன், ஜயங்கொண்டம்  மாவட்ட உரிமையியல் நீதிபதி பாரதிராஜாஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சட்டம் சார்ந்த பெண்கள் சொத்துரிமை, பாலியல் தீண்டுதலுக்கு எதிரான சட்டம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டம், வரதட்சிணை ஒழிப்புத் திட்டம், இளவயது திருமணத் தடை சட்டம் சார்ந்த கேள்விகளுக்கு  விளக்கம் அளித்தனர். வழக்குரைஞர்கள் முருகன்,உத்திராபதி, கலைமணி, காந்திமதி,அன்னம்மாள், புவனேஸ்வரி, தலைமை ஆசிரியை கலைமதி, உதவித் தலைமை ஆசிரியர் சம்பத் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT