மீன்சுருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டுப் பேரணியில் தாக்குதல் நடத்திய போலீஸாரைக் கண்டித்து அரியலூர் மாவட்டம்
தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டுப் பேரணியில் தாக்குதல் நடத்திய போலீஸாரைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகேயுள்ள மீன்சுருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரணியில் தாக்குதல் நடத்திய மாவட்டக் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம் உள்ளிட்ட போலீஸாரை பணியிடைநீக்கம் செய்யக் கோரியும், அதை ஆதரித்து பேசிய ஹெச். ராஜாவை கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலர் கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மணிவேல், தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னபாண்டியன், ஒன்றியச் செயலர் வெங்கடாசலம், மாவட்டக் குழு உறுப்பினர் துரைராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியக் குழு உறுப்பினர் உத்திராபதி, ரமேஷ், மீனா, பத்மாவதி, குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பூபாலன் நன்றி கூறினார்.