கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்களிடம் அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்து போராடவும் உறுதியேற்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஆட்சியர் மு. விஜயலட்சுமி தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன் முன்னிலையில் அனைத்து துறை அதிகாரிகள் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி திங்கள்கிழமை ஏற்கப்பட்டது.
முன்னாள் பாரதப்பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி நினைவு தினமான மே 21 ஆம் தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தி. ஸ்ரீதர், மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இருதயமேரி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் உள்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.