அரியலூர்

தேர்தல் புறக்கணிப்பு தகராறு:  இளைஞர் மீது வழக்கு பதிவு

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்றத்

DIN

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை தகாத வார்த்தையால் திட்டிய இளைஞர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 
ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்தை உடனே தொடங்கவேண்டும். இல்லையெனில், நிலத்தை விவசாயிகளுக்கே ஒப்படைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக  தெரிவித்து மேலூர் கிராம மக்கள் தங்களது வீடுகளில் அண்மையில் கருப்பு க்கொடி கட்டி எதிர்ப்பைப் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேலூர் மக்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. 
இதனால் வேட்பாளர்கள் வாக்குசேகரிக்க அப்பகுதிக்குச் செல்லாத நிலையில், கடந்த 28 ஆம் தேதி வேட்பாளரை ஊருக்குள் வரவைப்பது குறித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசனுக்கும் (62), ராமதாஸ் (32) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமதாஸ் , கணேசனை தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. கணேசன் அளித்த புகாரின் பேரில் ஜயங்கொண்டம் போலீஸார் ராமதாஸ் மீது சனிக்கிழமை இரவு வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT