அரியலூர்

ராகுல்காந்தி பிரதமராக  வேண்டும் என்பதே லட்சியம்

ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்பதே அனைவரின் லட்சியம் என்றார் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள்

DIN


ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்பதே அனைவரின் லட்சியம் என்றார் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவர்,அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தபோது   பேசியது: அமலாக்க துறை, வருமானவரித் துறை, சிபிஐ ஆகியவற்றை கொண்டு மிரட்டி நிர்பந்திக்க வைத்த கூட்டணி. 
போராட்டத்தில் திமுகவோடு கைகோத்த கட்சிகள்,தற்போது தேர்தலிலும் கூட்டணி வைத்துள்ளோம். இந்துக்களை காப்பாற்றிட திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். பரிசுத்தமான கூட்டணி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. யாரை ஏமாற்ற இந்துக்களின் பாதுகாவலன் என மோடி கூறி வருகிறார்.திருமாவளவன் ஜெயிப்பது முக்கியமல்ல, ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்பதே லட்சியம் என்றார் அவர். கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT