அரியலூர்

காசோலை திரும்பியதாக பணம் பிடிப்பு: பெண் புகார்

DIN


அரியலூர் அருகே காசோலை புத்தகம் கைக்கு கிடைக்காத நிலையில், காசோலை திரும்பியதாக (பவுன்ஸ்) கூறி பணம் பிடிக்கப்பட்டது குறித்து பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
விளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி கனிமொழி(40). இவர் தனது தந்தை தியாகராஜன் வீட்டில் வசிக்கிறார். கடந்த 4 ஆம் தேதி விளாங்குடியிலுள்ள ஒரு தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ள இவருக்கு ஏடிஎம் கார்டு மட்டும் வந்துள்ளது, காசோலை புத்தகம் வரவில்லை. இதுகுறித்து வங்கி மேலாளரிடம் அவர் கேட்டபோது, அஞ்சல் மூலம் வரும் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காசோலை பவுன்ஸ் ஆனதாகவும்,அதற்கு சேமிப்புக் கணிக்கில் இருந்து பணம் பிடித்தம்  செய்யப்பட்டுள்ளதாக கனிமொழிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கனிமொழி வங்கி மேலாளரை சந்தித்து  கேட்டுள்ளார்.
அப்போது வங்கி கிளை மேலாளர் உங்களுக்கு காசோலை புத்தகம் அனுப்பட்டுள்ளது. அது அரியலூர் தலைமை அஞ்சல் நிலையம் வரை சென்றுள்ளது. அதன்பிறகு யாரிடம் சென்றுள்ளது எனத் தெரியவில்லை என்றிருக்கிறார்.  புகாரின் பேரில் கயர்லாபாத் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

உன் பார்வையில்..

SCROLL FOR NEXT