அரியலூர்

அரியலூரில் நாளை மரபு விதை கண்காட்சி

DIN

அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மரபு விதைகள் கண்காட்சி மற்றும் விற்பனை திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் மாப்பிள்ளைச் சம்பா, கிச்சிடிச் சம்பா, கருப்பு கவுனி, சிவப்பு கவுனி, நவரா, கல்லுருண்டை, சின்னார் 20, பால்குடவாழை, கம்பு, தினை, குதிரைவாலி, சாமை, வரகு, கேழ்வரகு, எள், துவரை, காய்கறி, கீரை உள்ளிட்ட பல்வேறு விதைகளும், இயற்கையில் விளைவிக்கப்பட்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவுப்பொருட்களும், நெகிழி தவிர்க்க துணிப்பைகளும், பசுமை நூல்களும், இயற்கை இடுபொருட்களான ஆவூட்டம், மூலிகை பூச்சி விரட்டி, மீன் அமிலம், மூலிகை செடிகளும் காட்சிக்கும், விற்பனைக்கும் இடம் பெறுகின்றன. மேலும், மூலிகை, சித்த மருத்துவ ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் மரபு வேளாண் அறிஞர் பாமயனின் கருத்தரங்கம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தமிழ்க்காடு இயற்கை வேளாண் இயக்கம் செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT