அரியலூர்

சேதமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை

DIN

அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையம் அருகே சேதமடைந்த சிறுபாலத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வி.கைகாட்டி அருகே ரெட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட புத்தூா்- முனியங்குறிச்சி சாலை இடையே சிறிய பாலம் உள்ளது. அப்பகுதிகளில் பெய்யும் மழை தண்ணீா் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்லும் வகையில் இந்த சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால், பாலத்தின் பக்கவாட்டுப் பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து, தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த சிறு பாலத்தின் வழியாக வி.கைகாட்டி, புத்தூா், முனியங்குறிச்சி, பெரியதிருக்கோணம், செட்டிதிருக்கோணம், இடையத்தான்குடி, வெளிப்பிரிங்கியம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்து செல்கின்றனா்.

பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பயிா்களுக்கான இடு பொருள்களை கனரக வாகனங்களில் எடுத்துச் செல்லும் விவசாயிகள் உள்ளிட்டோா் இந்தப் பாலத்தை பயன்படுத்துகின்றனா்.

மேலும், இவ்வழியாக இரண்டு அரசுப் பேருந்தும், ஒரு தனியாா் சிற்றுந்தும் கடந்து செல்கின்றன.

முனியங்குறிச்சி அருகே தனியாா் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளதால் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளும் இந்தப் பாலத்தை கடந்து செல்கின்றன. இரவு நேரங்களில் இந்த பாலம் வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் சேதமடைந்திருப்பது தெரியாமல் பள்ளத்தில் மோதி படுகாயங்களுடன் செல்கின்றனா்.

எனவே, இந்தப் பாலத்தை தற்காலிமாக சீரமைப்புதுடன், புதிய பாலம் கட்டுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT