அனுமதியின்றி மது விற்றவர் கைது
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மது விற்றவரை தா. பழூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மது விற்றவரை தா. பழூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், தா. பழூர் காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆயிரப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் வேல்முருகன் தனது வீட்டுக்கருகே மதுவை மறைத்து வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைதுசெய்து மதுவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.