அரியலூர்

காணும் பொங்கல் விழா போட்டிகள்

DIN

அரியலூர் காளியம்மன் கோயில் தெருவில் பொதுமக்கள் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற விளையாட்டு போட்டிக்கு சமூக ஆர்வலர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். 
பானை உடைத்தல், கபடி, சிலம்பம், ஓட்டப்பந்தயம், ஸ்பூனில் எலும்பிச்சை பழம் வைத்து ஓடுதல், இளவட்டக்கல் தூக்குதல், சாக்குகளை காலில் கட்டி ஓடுதல், கையில் தண்ணீரை வைத்துக்கொண்டு சிந்தாமல் ஓடுதல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் அனைத்து ஊராட்சிகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
மீன் சுருட்டியில்...:  மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மீன்சுருட்டி தொரப்பு கிராமத்தில் தேவர் பேரவை சார்பில் மினி மாரத்தான் ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
தேவர் பேரவை மாவட்டத் தலைவர் சிற்றரசு கலந்து கொண்டு மாராத்தான் ஓட்டத்தைத் தொடக்கி வைத்தும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கிராம நாட்டார் ராமலிங்கம் தலைமை வகித்தார். கணக்காளர் ஜெயராஜ், செயலர் காளீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். முதல் பரிசை முகேஷ், இரண்டாவது பரிசை ஆகாஷ், மூன்றாம் பரிசை வேலவன் ஆகியோர் பெற்றனர். சிறப்பு பரிசாக 172 பேருக்கு தலா ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது. இதில், 16 கிராம நாட்டார்கள் கலந்து கொண்டனர். துணை செயலர் சண்முகம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT