அரியலூர்

புத்தகத் திருவிழா விழிப்புணர்வுப் பேரணி

DIN

அரியலூரில் 19-இல் புத்தகத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, ஜயங்கொண்டத்தில் தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணியை உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் மணிவண்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பிரபஞ்ச தெய்வீக பேராற்றல் பவுண்டேஷன் தலைவர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.
தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனி. பாலகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியர் ராஜப்ரியன், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் புத்தக  வாசிப்பு பற்றிய குறிப்புகள் அடங்கிய விளம்பரப் பதாகைகளை கையில் ஏந்திச் சென்று, முழக்கமிட்டனர். 
பேரணியானது கடைவீதி, அண்ணா சாலை, நான்கு சாலை சந்திப்பு வழியாக சென்று அன்னை தெரசா மெட்ரிக். பள்ளியில் நிறைவடைந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT