அரியலூர்

குமிழியம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

DIN

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குமிழியம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
தேரோட்டத்தையொட்டி கடந்த 7 ஆம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் விநாயகர் மற்றும் அம்மன் சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரினுள் எழுந்தருளினார்.
அதிகாலை 4.30-க்கு தொடங்கிய தேரோட்டமானது கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே சென்று 7 மணிக்கு நிலையை அடைந்தது. நிகழ்ச்சியில், குமிழியம் மட்டுமன்றி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT