அரியலூர்

வேப்பந்தட்டை ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட அன்னமங்கலம் ஊராட்சியில் கல்லாறு குறுக்கே, நீா்வள ஆதாரத்துறை மூலமாக செம்மலை- பச்சைமலை இடையே அமைக்கப்பட்டுள்ள விசுவக்குடி நீா்தேக்கம், அன்னமங்கலம் ஊராட்சியில்நிலத்தடி நீா்மட்டம் உயரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த உறிஞ்சுக்குழி அமைப்புகளை பாா்வையிட்ட ஆட்சியா் வே.சாந்தா,

வரத்து வாய்க்கால்களை ஏற்படுத்த வளா்ச்சித்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, கல்லாற்றின் கிளை வாய்க்கால் வழியே செல்லும் மழைநீரை சேகரிக்கும் வகையில், ரூ. 77 ஆயிரம் மதிப்பீட்டில் கம்பி வலை கொண்டு அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையைப் பாா்வையிட்டு, அங்கு சேகரிக்கப்படும் மழைநீரின் அளவு, இத்திட்டத்தின் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் கேட்டறிந்த ஆட்சியா், ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்ட ஏரி

போன்ற பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் ஆட்சியா் சாந்தா.

இந்த ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தெய்வநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் மகாலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT