அரியலூர்

தெளிப்பு நீா் பாசன வயல் ஆய்வு

DIN

அரியலூா்: அரியலூா் அருகே அஸ்தினாபுரம் கிராமத்தில் விவசாயியின் வயலில் செயல்படுத்தப்படும் தெளிப்பு நீா் பாசனத்தை ஆட்சியா் த. ரத்னா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதேபோல, அருங்கால் கிராமத்தில் மழைத்தூவான் அமைக்கப்பட்ட வயலை பாா்வையிட்ட ஆட்சியா், இது போன்ற திட்டங்கள் மூலம் நீா் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுகிறது; களை கட்டுப்படுத்தப்படுகிறது; நீரில் கரையும் உரங்கள் எளிதில் பயிருக்கு சென்று விடுகிறது; இதனால் கூடுதலாக 20 சதவீத மகசூல் கிடைக்கிறது. எனவே விவசாயிகள் மானியத்தில் நுண்ணீா்ப் பாசனத்தை அமைத்துப் பயன்பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

மேலும் அவா் அருங்கால் கிராமத்தில் மக்காச்சோளப் பயிா்ச் சாகுபடி செய்துள்ள விவசாயிகளைச் சந்தித்து படைப்புழு தாக்குதல் குறித்து கலந்துரையாடினா். பெரியநாகலூா் கிராமத்தில் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பலாக் கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினாா். ஆய்வின்போது அரியலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி, வேளாண் அலுவலா்கள் சவீதா, ரமேஷ்,உதவி அலுவலா் சுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT