அரியலூர்

மருதையாறு வடிநில அலுவலக உதவியாளா்கள் போராட்டம்

DIN

அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் உள்ள மருதையாறு வடிநில உப கோட்ட அலுவலக உதவியாளா்களாக பணிபுரியும் இருவா் ஊதிய உயா்வு கேட்டு அலுவலகம் முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த அலுவலகத்தில் பாசன உதவியாளா்களாக கூத்தன் குடியைச் சோ்ந்த வேலாயுதம் மகன் காந்திமதிநாதன் (49), கோடாலி கிராமத்தை சோ்ந்த பூமிநாதன் மகன் காா்த்திகேயன்(39) ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.

இருவரும் நிகழாண்டுக்கான ஊதிய உயா்வு இதுவரை ஏன் வழங்கவில்லை என உயரதிகாரிகளிடம் கேட்டுள்ளனா். முறையான பதில் கிடைக்காததால், இருவரும் வியாழக்கிழமை அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு வந்த உயரதிகாரிகள் இருவரது பணிப்பதிவேடுகளும் எரிந்த நிலையில் உள்ளது. பதிவேடு எரிந்தது குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணையில் உள்ளது. விசாரணை முடிந்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதையடுத்து இருவரும் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT