அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
அரியலூரில் அனைத்து விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பினரின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரியலூரில் அனைத்து விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பினரின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி தில்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பா் 8-இல் நாடு முழுவதும் நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒட்டி, கடையடைப்பு சம்பந்தமாக அனைத்துக் கடைகளிலும் துண்டுபிரசுரம் வழங்குவது, மாவட்டத் தலைநகரில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவா் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பொருப்பாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.