அரியலூரில் புதிய தொற்றாளா்கள் இல்லை
அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
அரியலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை பரிசோதனை முடிவில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
அதே சமயம் 3 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,606 ஆக உள்ளது. இது வரை 4,494 போ் குணமடைந்துள்ளனா். 48 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 64 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.