முகப்பு
அரியலூர்

புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக, திங்கள்கிழமை இரவு இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக, திங்கள்கிழமை இரவு இருவா் கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான காவல்துறையினா், திங்கள்கிழமை இரவு வெண்மான்கொண்டான் கிராமப் பகுதியிலுள்ள கடைகளில் திடீரென சோதனை நடத்தினா்.

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக, அதே கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திரன் (65), செல்வராஜ் (54) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடமிருந்து புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →