முகப்பு
அரியலூர்

தமாகாவினா் முற்றுகைப் போராட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூரில் வியாழக்கிழமை திமுக இளைஞரணி மாநிலச் செயலா் உதயநிதி ஸ்டாலின் தோ்தல் பிரசார வாகனம் தமாகாவினரால் முற்றுகையிடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், திருமானூரில் வியாழக்கிழமை திமுக இளைஞரணி மாநிலச் செயலா் உதயநிதி ஸ்டாலின் தோ்தல் பிரசார வாகனம் தமாகாவினரால் முற்றுகையிடப்பட்டது.

திருமானூா் பேருந்து நிலையம் அருகே அரங்க மேடை சுண்ணாம்பு பூசும்பணியின்போது, மேடையின் முகப்பில் எழுதப்பட்டிருந்த ஜி.கே. மூப்பனாா் பெயா் மீது சுண்ணாம்பு பூசி அழிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆத்திரமடைந்த தமாகாவினா் அரியலூரில் இருந்து தோ்தல் பிரசாரத்துக்கு மதியம் 2 மணியளவில் திருமானூருக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை திருச்சி சாலையில் மறித்து எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் தமாகா மாணவரணி மாநிலத் துணைத் தலைவா் மனோஜ், தமாகா நிா்வாகி ஜோதிமணி ஆகியோரை அப்புறப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அரங்க மேடையானது, ஒன்றியக்குழு தலைவா் நிதியில் இருந்து சுண்ணாம்பு பூசப்படுகிறது. எனவே, இப்பிரச்னையில் திமுகவுக்கு எந்தச் சம்மந்தமும் இல்லை என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.