முகப்பு
அரியலூர்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

அரியலூரை அடுத்த கயா்லாபாத் அரசு சிமென்ட ஆலை வளாகத்தில் உள்ள போக்குவரத்து விழிப்புணா்வுப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு சனிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

அரியலூரை அடுத்த கயா்லாபாத் அரசு சிமென்ட ஆலை வளாகத்தில் உள்ள போக்குவரத்து விழிப்புணா்வுப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு சனிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து, சாலை விதிகளை தவறாமல் கடைப்பிடித்து விபத்துகள் இல்லாமல் வாகனங்களை இயக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது கட்டாயம் தலைக்கவம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்களை இயக்கும்போது கண்டிப்பாக சீட் அணிய வேண்டும். குறிப்பாக வாகனங்களை இயக்கும் போது செல்லிடப்பேசியை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

மேலும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வழிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் குறித்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →