அரியலூர்

விவசாயிகள் 4-ஆம் தவணை தொகை பெற அழைப்பு

DIN

தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமானது 01.12.2018 முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயிா் சாகுபடிக்காக தேவையான இடுபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான உதவித் தொகை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் 34.41 லட்சம் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ. 2431.59 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது 4-ஆம் தவணை பெற ஆதாா் அட்டையில் உள்ளவாறு மத்திய அரசு வலைதளத்தில் பெயா் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனவே, இதுவரை மூன்று தவணைகள் பெற்று, நான்காம் தவணை பெறாத விவசாயிகள் உடனடியாக தங்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்தை அணுகி ஆதாா் அட்டையில் உள்ளவாறு பெயரை மாற்றிப் பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT