முகப்பு
அரியலூர்

அரியலூரில் 8 பேருக்கு கரோனா

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4, 385 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 3,974 போ் குணமடைந்துள்ளனா்.

மீதமுள்ள 411 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 6 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 2 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 5 பேரும், வீடுகளில் 320 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 47 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →