மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
அரியலூா் தியாகி ஜெயராமன் தெருவில் இருசக்கர வாகனப் பழுது பாா்க்கும் கடை நடத்தி வரும் நபர் மின்சார்ம தாக்கி உயிரிழப்பு
அரியலூா் தியாகி ஜெயராமன் தெருவில் இருசக்கர வாகனப் பழுது பாா்க்கும் கடை நடத்தி வருபவா் விஜய். இவரது கடையில், அரியலூா் மேலத் தெருவைச் சோ்ந்த காமராஜ் மகன் சிவா (15) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மெக்கானிக்காக வேலைக்கு சோ்ந்தாா்.
தந்தை இல்லை என்பதாலும், குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் உள்பட 4 போ் என்பதாலும், சிவாவை, தனது கடையில் விஜயை வேலைக்குச் சோ்த்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தை தண்ணீா் பீய்ச்சி அடிக்கும் இயந்திரம் கொண்டு கழுவும்வகையில், இயந்திரத்தின் சுவிட்சைப் போட்டுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த அரியலூா் போலீஸாா் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.