முகப்பு
தேர்தல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப். 23-ல் பொது விடுமுறை!

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்.23 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 27 மார்ச் 2026, 5:56 pm IST
பெண் வாக்காளர்கள்... - ens
பகிர்:

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்.23 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக, பள்ளி, கல்லூரிகளுக்கான தேர்வுகள் முடிக்கப்பட்டு விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித்துறை பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப். 23 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுவதாக தலைமைச் செயலர் உத்தவிட்டுள்ளார்.

வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி, அனைத்துத் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று அரசாணையில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

summary

The Tamil Nadu government has issued a government order declaring April 23 as a public holiday in view of the assembly elections in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.