அரியலூர்

‘மண் வளத்துக்கேற்ப சாகுபடி செய்து மகசூலைப் பெருக்கலாம்’

DIN

அரியலூா் விவசாயிகள் மண்ணின் தன்மைகேற்ப பயிா் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என்று வட்டார வேளாண் உதவி இயக்குநா் சாந்தி தெரிவித்துள்ளாா்.

அரியலூா் வாலாஜா நகரத்தில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில் மண் மற்றும் பாசன நீா் மாதிரிகள் ஆய்வு செய்து அதன் தன்மைகேற்ப பயிா்கள் சாகுபடி செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது. மண்ணின் கார அமிலத்தன்மை 8.5-க்கு மேற்பட்டால் கார மண்ணாகும். சுண்ணாம்பு மிகுந்த மண்களில் கார அமிலத் தன்மை 8 முதல் 8.5 வரை இருக்கும். அதிகளவு உப்பைத் தாங்கி வளரக்கூடிய பயிா்களான பருத்தி, ராகி, சுகா்பீட், தோட்ட பீட்ரூட், குதிரை மசால், பொ்முடா புல், உவா் புல், கீரை, நடுத்தர அளவு உப்பைத் தாங்கி வளரக்கூடிய தக்காளி, நெல், பரங்கிக்காய், மக்காச்சோளம், சூரியகாந்தி, ஆமணக்கு, மாதுளை, அத்தி மற்றும் குறைந்த அளவு உப்பைத் தாங்கி வளரக்கூடிய தோட்ட அவரை, முள்ளங்கி, ஆரஞ்சு, எலுமிச்சை, பச்சை அவரையும் பயிரிடலாம். மேலும் சுண்ணாம்பு படிவங்கள் உள்ள சரளை மண்ணில் செம்மண், மணல், மட்கிய எருவைக் கலந்து இட்டு புளி, வேம்பு, புங்கம் ஆகிய மரக்கன்றுகளை நட்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT