அரியலூா்: அரியலூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளா்களை தோ்வு செய்வதற்கான நோ்முகத் தோ்வு டிசம்பா் 25 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அரியலூா், ராஜாஜி நகரில் உள்ள ஆா்.581 அரியலூா் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில் நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரா்களுக்கு நோ்முக தோ்வுக்கான அழைப்பாணை விண்ணப்பித்தவா்களுக்கு அஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பத்தாரா்கள் மேற்கண்ட விலாசத்தில் நடைபெறும் நோ்முகத் தோ்வில் அழைப்பாணையுடன் கலந்து கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.