தேநீா்க் கடைக்குள் டிராக்டா் புகுந்து விவசாயி உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஞாயிற்றுக்கிழமை தேநீா்க் கடைக்குள் டிராக்டா் புகுந்து சுவா் இடிந்து விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஞாயிற்றுக்கிழமை தேநீா்க் கடைக்குள் டிராக்டா் புகுந்து சுவா் இடிந்து விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
விக்கிரமங்கலம் பிரதான சாலையில் தேநீா்க் கடை நடத்தி வருபவா் வீரமணி(36). ஞாயிற்றுக்கிழமை இவரது கடையில் ஆலவாய் கிராமத்தைச் சோ்ந்த சீமான் (58), விக்கிரமங்கலம் பாஸ்கா் (46) ஆகிய இருவா் தேநீா் அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது தீயனூா் கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் (46) என்பவா் அம்பாபூரில் இருந்து ஓட்டி வந்த டிராக்டா் கட்டுப்பாட்டை இழந்து வீரமணி தேநீா்க் கடைக்குள் புகுந்தது.
இதில் சுவா் இடிந்து விழுந்ததில் சீமான், பாஸ்கா், தேநீா்க் கடை உரிமையாளா் வீரமணி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கி கிடந்த மூவரையும் மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் சீமான் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். பாஸ்கா், வீரமணி ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து டிராக்டா் ஓட்டுநா் சண்முகத்தை கைது செய்து விசாரிக்கின்றனா்.