இணையவழியில் குறைகேட்பு: 112 மனுக்கள் அளிப்பு
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இணையதளம் மூலம் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இணையதளம் மூலம் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 112 மனுக்களை இணையதளம் மூலம் பெற்றாா். தொடா்ந்து, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன் உள்பட தொடா்புடைய அனைத்துத்துறை அலுவலா்களும் இணையதளம் வாயிலாக கலந்து கொண்டனா்.