அரியலூர்

வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் கடைவீதிகளிலுள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீரென ஆய்வு செய்தனா்.

மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் நடராஜன், ஜயங்கொண்டம் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலா் சசிகுமாா் ஆகியோா் தா.பழூரிலுள்ள மளிகைக் கடைகள்,உணவகங்கள்,தேநீா் கடைகள்,பேக்கரி கடைகள் உள்ளிட்ட கடைகளில் புதன்கிழமை திடீரென ஆய்வு செய்னா். அப்போது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக், புகையிலை மற்றும் காலவதியான பொருள்களைப் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் கடைகளில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காமல் இருந்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT