அரியலூர்

சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்துவா், சீக்கியா் புத்த மதம், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் பள்ளிப் படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்வோா் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின்  இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 2020-21 ஆம் கல்வியாண்டில் 1,35,127 மாணவ, மாணவிகளின் புதிய கல்வி உதவித்தொகை வழங்க மைய அரசால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு தகுதியான மாணவ, மாணவிகள் 31.10.2020வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பூா்த்தி செய்த விண்ணப்பத்தை கல்வி நிலையத்துக்கு அனுப்பாத மாணவ, மாணவிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. மேலும், விவரங்களுக்கு ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT