முகப்பு
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே லாரி - கார் மோதி விபத்து: ஒருவர் பலி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே லாரியும்,காரும் மோதிக் கொண்ட விபத்தில் நகை அடகு கடை உரிமையாளரின் மனைவி சம்பவ இடத்திலேயே பலியாகினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
ஜெயங்கொண்டம் அருகே லாரி - கார் மோதி விபத்து: ஒருவர் பலி
பகிர்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே லாரியும்,காரும் மோதிக் கொண்ட விபத்தில் நகை அடகு கடை உரிமையாளரின் மனைவி சம்பவ இடத்திலேயே பலியாகினார்.

கும்பகோணம் பெரியத்தெருவைச் சேர்ந்த முகந்த்சந்த் மகன் நரேஷ் குமார்(53). இவர், கும்பகோணம் பெரியத்தெருவில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது மனைவி மனிஷா(47) உடன் சென்னை சென்று நகைகள் கொள்முதல் செய்து கொண்டு மீண்டும் சனிக்கிழமை கும்பகோணத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தார். காரை கும்பகோணத்தை அடுத்த திருவிசநல்லூரை சேர்ந்த திருமுருகன்(35) ஓட்டியுள்ளார்.

மூவரும் ஆண்டிமடம் அடுத்த கூவத்தூர் குடிக்காடு பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே சிலிண்டர் ஏற்றி வந்த லாரி, கார் மீது மோதியுள்ளது. இதில், காரின் பின்பகுதியில் அமர்ந்திருந்த மனிஷா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினார்.

காரில் ஏர் பலூன் இருந்ததால் ஓட்டுநரும், முன்னால் அமர்ந்திருந்த நரேஷ்குமாரும் உயிர் தப்பினர். விபத்து குறித்து ஆண்டிமடம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →